கடந்த 6 மாதத்தில் கஞ்சா விற்ற 36 பேர் சிக்கினர்


கடந்த 6 மாதத்தில் கஞ்சா விற்ற 36 பேர் சிக்கினர்
x

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடந்த 6 மாதத்தில் கஞ்சா விற்ற 36 பேர் சிக்கினர்.

தேனி

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெற்று வந்தது. இதனை தடுக்கும் வகையில், போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில் வருசநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மேலும் கஞ்சா விற்றவர்களை பிடித்து சிறையில் அடைத்தனர். அதன்படி கடந்த 6 மாத காலத்தில் கஞ்சா விற்ற 36 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ஆகிய கிராமங்களை சேர்ந்த 10 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை தொடர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story