மது விற்ற 4 பேர் கைது


மது விற்ற 4 பேர் கைது
x

கடமலைக்குண்டு பகுதியில் மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்

தேனி

கடமலைக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தங்கம்மாள்புரத்தில் டாஸ்மாக் கடை அருகே மது விற்ற அதே கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 114 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல கீழபூசணூத்து, சிறப்பாறை, கரட்டுப்பட்டியில் மது விற்ற பால்பாண்டி (54), பிரபாகரன் (37), பாண்டியன் (44) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 3 பேரிடம் இருந்தும் மொத்தம் 39 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story