சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 4 பேர் கைது
சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்,
சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமராஜபுரம் ரோடு அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டு இருந்த விரியூர் கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் லூர்துராஜ் (வயது 27) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதே போன்று சேஷசமுத்திரம் குன்றுமேட்டு அருகில் சாராயம் விற்ற விஜயசாந்தி (27), தியாகராஜபுரம் ஏரிக்கரை அருகே கரடிசித்தூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் (49), பாவளம் சுடுகாடு அருகில் சேராப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த துரைமணிகண்டன்(28) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 35 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story