4 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன
4 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன
கொரடாச்சேரி அருகே பெய்த மழையால் 4 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சேதமடைந்த மின்கம்பங்களை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை அடுத்த குளிக்கரையில் மாரியம்மன் கோவில் மேலத்தெரு உள்ளது. இந்த தெருவில் 50 வீடுகள் உள்ளன. இங்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் பெய்த மழையின் காரணமாக பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கி கிடந்தனர். அப்போது மழையால் மாரியம்மன் கோவில் மேல தெருவில் உள்ள 4 மின்கம்பங்கள் திடீரென சாய்ந்து விழுந்துள்ளன.
உடனடியாக சீரமைக்க வேண்டும்
இந்த மின்கம்பங்கள் கூரை வீடுகள் மற்றும் தெருவின் ஓரத்தில் விழுந்தன. அப்போது மின்கம்பங்களில் இருந்து தீப்பொறி பறந்தது. இதனால் மின்தடை ஏற்பட்டது. ஆனால் யாருக்கும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. சேதமடைந்த மின்கம்பங்களை உடனடியாக சீரமைத்து தர வேண்டு்ம் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.