டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்ற 45 பணியாளர்களுக்கு அபராதம்


டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்ற 45 பணியாளர்களுக்கு அபராதம்
x

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்ற 45 பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம்

சேலம்:

சேலம் மாவட்டத்தில் 218 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் 1,200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தநிலையில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் சமீபத்தில் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது பல்வேறு கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்ததாக 45 விற்பனையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். இதில் ரூ.5 கூடுதலாக மதுபானம் விற்பனை செய்த 37 பேருக்கு தலா ரூ.5,900-ம், ரூ.10 கூடுதலாக மதுபானம் விற்பனை செய்த 8 பேருக்கு ரூ.11,800-ம் என மொத்தம் 45 பணியாளர்களுக்கு ரூ.3 லட்சத்து 12 ஆயிரத்து 700அபராதம் விதிக்கப்பட்டது. இதனிடையே கூடுதல் விலைக்கு மது விற்ற புகாரில் சிக்கிய 8 பேரை வேறு டாஸ்மாக் கடைகளுக்கு பணி இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story