உண்டியல் மூலம் ரூ.48¼ லட்சம் காணிக்கை
உண்டியல் மூலம் ரூ.48¼ லட்சம் காணிக்கையாக கிடைத்தது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்துவதற்கு வசதியாக பல்வேறு பகுதிகளில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் மாதந்தோறும் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதத்திற்கான காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதையொட்டி உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் சேகரிக்கப்பட்டு, கருட மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கு, கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, மலைக்கோட்டை கோவில் உதவி ஆணையர் ஆர்.ஹரிஹரசுப்பிரமணியன், கோவில் மேலாளர் கு.தமிழ்செல்வி, ஆய்வாளர் சு.பாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.48 லட்சத்து 29 ஆயிரத்து 243 ரொக்கம், 70 கிராம் தங்கம், 465 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் 251 ஆகியவை காணிக்கையாக கிடைத்தன.