48-வது நினைவு தினம் அனுசரிப்பு: காமராஜர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி


48-வது நினைவு தினம் அனுசரிப்பு: காமராஜர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி
x

காமராஜரின் 48-வது நினைவு தினத்தையொட்டி அவருடைய நினைவிடத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை,

பெருந்தலைவர் காமராஜரின் 48-வது நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

காமராஜர் நினைவிடத்தில் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அப்போது சமத்துவ கழகத்தின் பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், மாபா பாண்டியராஜன், இலக்கிய அணி மாநில துணை செயலாளர் இ.சி.சேகர், முன்னாள் எம்.பி. டாக்டர் ஜெயவர்தன், மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, வேளச்சேரி அசோக் உள்பட நிர்வாகிகளும், ஓ.பன்னீர்செல்வம் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர், கோவை செல்வராஜ், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, அ.ம.மு.க. சார்பில் துணை பொதுச்செயலாளர் செந்தமிழன், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி உள்பட நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ்-பா.ஜ.க.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், செய்தி தொடர்பாளர் கோபண்ணா, மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் பிரசாத், எம்.எஸ்.திரவியம், எம்.பி.ரஞ்சன்குமார், சிவராஜசேகரன், ஆர்.டி.ஐ. பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, கவுன்சிலர் அமிர்தவர்ஷினி உள்பட நிர்வாகிகளும்,

பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், வினோஜ் பி.செல்வம், மாவட்ட தலைவர் காளிதாஸ் உள்பட நிர்வாகிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்கள் செல்லதுரை, செல்வம், பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய இணை மந்திரி ஏ.கே.மூர்த்தி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணி, ஜனார்த்தனன்.

என்.ஆர்.தனபாலன், சுபாஷ் பண்ணையார்

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட தலைவர் சைதை மனோகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசு, செய்தி தொடர்பாளர் செந்தில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர்கள் டி.மகாலிங்கம், ஜி.ஈஸ்வரன், பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன்,

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், நிர்வாகிகள் ரமேஷ்குமார், சிவகுமார், சந்தானம், பனங்காட்டு மக்கள் கழகத்தின் தலைவர் சுபாஷ் பண்ணையார், திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், திரைப்பட நடிகர் ஜீவா, காமராஜர் பேத்தி மயூரி, மா.பொ.சி. பேரன் டாக்டர் செந்தில், மா.பொ.சி. அறக்கட்டளை நிறுவனர் பாஸ்கரன், சமத்துவ இளைஞர்கள் முன்னேற்ற கழக தலைவர் ரமேஷ், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி தலைவர் பா.இசக்கிமுத்து, மாநில தலைவர் மணிஅரசன்.

வியாபாரிகள், நாடார் சங்கம்

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கத்தின் பேரவை தலைவர் த.வெள்ளையன், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை ஒருங்கிணைப்பாளர் மு.அருண்குமார், தட்சணமாற நாடார் சங்கத்தின் செயலாளர் டி.ராஜ்குமார், பொருளாளர் ஏ.செல்வராஜ், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் தலைவர் டி.பத்மநாபன், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், ஒருங்கிணைப்பாளர் மாரீஸ்வரன், துணை தலைவர் ஆர்.காமராஜ், செயலாளர் மாடசாமி, இந்திய நாடார்கள் பேரமைப்பின் மாநில தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன், செயலாளர் மலர்மன்னன், பொருளாளர் சிவக்குமார்.

தமிழ்நாடு நாடார் சங்கம்

தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் ஜெ.முத்துரமேஷ், பொதுச்செயலாளர் வி.எல்.சி. ரவி, பொருளாளர் ஆடிட்டர் சிவராஜ், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.விஜயகுமார், பொருளாளர் மில்வின், கவுரவ ஆலோசகர் பொன் கீ பெருமாள், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு நிறுவன தலைவர் மின்னல் ஸ்டீபன், அகில இந்திய நாடார் மகாஜன சபை தலைவர் கார்த்திகேயன், பொதுச்செயலாளர் வைரவன், சிம்ம பேரவை தலைவர் ராவணன் ராமசாமி, ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் இ.மு.சீனிவாசன், கவுரவ தலைவர் வி.எல்.சி.பிரேம், சத்ரிய பாசறை தலைவர் சம்பத்குமார், திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்கத்தின் செயலாளர் ஜான் ஸ்டீபன், பொருளாளர் சின்னத்துரை, ஆலந்தூர் வட்டார நாடார் சங்கத்தின் தலைவர் கணேசன், பொருளாளர் லட்சுமணன், துணை தலைவர் தங்கராஜ், நாடார் மகாஜன சங்கத்தின் இணை செயலாளர் மாரிமுத்து, துணை தலைவர் சந்திரமோகன்,

புழல் நாடார் சங்கம்

அயன்புரம் நாடார் உறவின் முறை சங்க தலைவர் பிரபாகரன், துணை தலைவர் பாண்டியராஜன், புழல் வட்டார நாடார்கள் உறவின் முறை சங்கத்தின் முன்னாள் தலைவர் தர்மராஜ், செயலாளர் பட்டுத்துரை, பொருளாளர் சுரேஷ்குமார், ஆலோசகர் சாமுவேல், முகப்பேர் வட்டார நாடார்கள் மகாஜன சங்கத்தின் தலைவர் தேன்ராஜா, மாத்தூர் வட்டார நாடார் ஐக்கிய சங்கத்தின் தலைவர் எஸ்.ஜெ.துரை, மவுலிவாக்கம் சுற்று வட்டார நாடார்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பாஸ்கர், ராயபுரம் நாடார் சங்கத்தின் தலைவர் எட்வர்ட் ராஜா, மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்கத்தின் நிறுவன தலைவர் தங்கம், எர்ணாவூர் நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர் சுந்தரேசன், பொருளாளர் வன்னியராஜ், பாண்டிய நாட்டு நாடார் பேரவை தலைவர் பி.பொன் கற்குவேல்ராஜன், கிங்மேக்கர் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் டி.ராஜேஷ்குமார், தேசிய நாடார் கூட்டமைப்பின் தலைவர் சிவாஜி ராஜன், அகில பாரத பெருந்தலைவர் காமராஜர் மக்கள் நற்பணி இயக்கத்தின் பொதுச்செயலாளர் மதனவேல்ராஜன், காமராஜர் வம்ச பேரவை தலைவர் பெர்னாட் ஜான்சன், பொருளாளர் சீனிவாசன், காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் சென்னை மண்டல தலைவர் பால் பாண்டியன் உள்பட பல்வேறு அமைப்புகள், நாடார் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் காமராஜர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

அன்னதானம்

சமத்துவ மக்கள் கழகம், திருவான்மியூர், முகப்பேர் வட்டார நாடார் சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை சுபாஷ் பண்ணையார், என்.ஆர்.தனபாலன் ஆகியோர் வழங்கினார்கள்.

தியாகராயநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் ஆம் ஆத்மி கட்சி மாநில செயலாளர் வசீகரன், மகளிர் அணி தலைவி ஸ்டெல்லா மேரி உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.


Next Story