லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது


லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது
x

திருக்கோவிலூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் நகராட்சி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அதிக அளிவல் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருக்கோவிலூர் பஸ் நிலையம், கீழையூர், சந்தப்பேட்டை, நரிக்குறவர் குடிசைப்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சந்தப்பேட்டையை சேர்ந்த பாபு(வயது 50), தியாகராஜ நகர் பகுதி சக்திவேல்(43), திருக்கோவிலூர் பாலாஜி(42), என்.ஜி.ஜி.ஓ, நகர் பகுதி ஜெகதீசன்(57) மற்றும் தாசர்புரம் சுப்பிரமணியன் மகன் முருகன்(40) ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரத்து 500 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


Next Story