5-ந்தேதி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


5-ந்தேதி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

வருகிற 5-ந்தேதி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

பெரம்பலூர்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடைசியாக கடந்த 2002-ம் ஆண்டு நடந்தது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 5-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் நடைபெறவுள்ளது. தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெறும் கும்பாபிஷேகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். கும்பாபிஷேகத்திற்கான முதல் கால யாகசாலை பூஜை வருகிற 2-ந்தேதியும், 2, 3-ம் கால யாகசாலை பூஜைகள் 3-ந்தேதியும், 4-ம் கால யாகசாலை பூஜை 4-ந்தேதியும் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர், கோவில் ஊழியர்கள், பணியாளர்கள், பூசாரிகள், கிராம பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.


Next Story