ஸ்ரீவில்லிபுத்தூரில் 5 கருட சேவை


ஸ்ரீவில்லிபுத்தூரில் 5 கருட சேவை
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு 5 கருட சேவை நிகழ்ச்சி நடைெபற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,


ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு 5 கருட சேவை நிகழ்ச்சி நடைெபற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடிப்பூர திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் ஆடிப்பூர திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவிைன முன்னிட்டு தினமும் ரெங்கமன்னார், ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் 5-வது நாளான நேற்று கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை 11 மணிக்கு ஆண்டாள் கோவில் முன்பு உள்ள ஆடிப்பூர மண்டபத்தில் பெரிய ஆழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கருட சேவை

இதையடுத்து 5 கருட சேவைக்கு ெரங்க மன்னார், பெரிய பெருமாள், திருத்தங்கல் பெருமாள், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள், சுந்தர்ராஜ பெருமாள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் கோவில் முன்பு எழுந்தருளினார்.

தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பிறகு இரவு 10 மணிக்கு ஆண்டாள் கோவிலில் இருந்து கருட வாகனங்களில் 5 பெருமாளும் அலங்கரிக்கப்பட்டு பெரியாழ்வார் முன்னே வர ஆண்டாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளி கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. கருட சேவையை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்காக பக்தர்கள் திரண்டனர்.

சயனசேவை நிகழ்ச்சி

நாளை (வியாழக்கிழமை) சயன சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கிருஷ்ணன் கோவில் மண்டபத்தில் வைத்து சயனசேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன். கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர். கருடசேவையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.


Next Story