கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது
x

கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மங்களமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மங்களமேடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட லெப்பைக்குடிக்காடு ஏரிக்கரை ஜமாலியா நகரில் கஞ்சா வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த நியாஸ்அகமது(வயது 30), அபுபக்கர் அலி தெருவை சேர்ந்த தமீம்முன் அன்சாரி(22), பிலால்ரலித் தெருவை சேர்ந்த அகமது மாரூப்(26) மற்றும் குணசேகர், கோவர்தன் ஆகிய 5 பேரை போலீசார் பிடித்து மங்களமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 120 கிராம் எடையுள்ள 12 கஞ்சா பொட்டலங்களும், ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story