கோவில் உண்டியலில் பணம் திருடிய 5 பேர் கைது
கம்பம் அருகே கோவிலில் உண்டியலில் பணம் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில், ராயப்பன்பட்டி செல்லும் சாலையில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக முருகன் என்பவர் உள்ளார். நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்து வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் கோவிலுக்கு வந்தார். கருவறை கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் பூசாரி ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே ஊரை சேர்ந்த பிரதாப் (வயது 20), பிரகாஷ் (18), மாரிமுத்து (28) ராஜேஷ் கண்ணா (18) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story