குடியரசு தினத்தை முன்னிட்டு 547 போலீசார் பாதுகாப்பு


குடியரசு தினத்தை முன்னிட்டு 547 போலீசார் பாதுகாப்பு
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு 547 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குடியரசு தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் ெசய்யப்பட்டுள்ளன.

மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்காணிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

குற்றங்களை தடுக்க மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும். தேசிய தலைவர்களின் சிலைகள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் முக்கிய இடங்களில் நாசவேலை தடுப்பு குழுவினர் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் மூலம் சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு பணியில் போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையில், 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 4 போலீஸ் சூப்பிரண்டுகள், 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 64 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 547 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story