சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 636 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்


சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 636 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
x

மாணவர்களின் பாதுகாப்பிற்காக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 636 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னை,

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக நிர்பயா திட்டத்தின் கீழ் 4.65 கோடி ரூபாய் செலவில் 636 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் உள்ளன.

மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது நிர்பயா திட்ட நிதியின் கீழ் 159 மாநகராட்சி பள்ளி வளாகங்களில் ரூ.4,64,61,705 மதிப்பில் 636 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் புதிய கட்டிடங்கள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள், நவீன மேசைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், காலை உணவு திட்டம், கல்வி ஊக்கத்தொகை மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு, மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.


Next Story