குரூப்-2 தேர்வை 6,891 பேர் எழுதினர்


குரூப்-2 தேர்வை 6,891 பேர் எழுதினர்
x

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 6,891 பேர் எழுதினார்கள். 1,540 பேர் வரவில்லை.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 6,891 பேர் எழுதினார்கள். 1,540 பேர் வரவில்லை.

குரூப்-2 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில், குரூப்-2, 2 ஏ எழுத்துத்தேர்வு மூலம் 5,529 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலம் பல்வேறு துறைகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தகுதி உள்ளவர்கள் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் குரூப்-2 தேர்வு நடைபெற்றது.

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் தேர்வு எழுதுவதற்கு வசதியாக பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள் என மொத்தம் 27 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. குரூப்-2, 2 ஏ தேர்வை எழுதுவதற்கு மொத்தம் 8,431 பேர் விண்ணப்பித்தனர். தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

1,540 பேர் வரவில்லை

தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க துணை தாசில்தார் தலைமையில் போலீசார், உதவியாளர்கள் கொண்ட 10 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தது. பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதை தவிர ஆய்வு அலுவலர்கள் என்ற அடிப்படையில் ஒரு மையத்திற்கு 2 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

தேர்வு மையங்களில் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். 27 மையங்களில் நடந்த தேர்வை 6,891 பேர் எழுதினார்கள். 1,540 பேர் தேர்வு எழுத வரவில்லை. முன்னதாக கருவூலத்தில் இருந்து வினாத்தாள்களை அதிகாரிகள் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.


Next Story