குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 82 பேர் கைது


குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 82 பேர் கைது
x

குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 82 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

அதிரடி நடவடிக்கை

தமிழகம் முழுவதும் நடைபெறும் குற்றச்சம்பவங்களை குறைக்கும் விதமாக பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், திருச்சி மாநகரத்தில் குற்றச்சம்பவங்களை குறைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து திருச்சி மாநகர வடக்கு, தெற்கு, சரக உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் அறிவுரை வழங்கினார்.

அதன்படி, திருச்சி மாவட்டத்தில் போலீசார் 'மின்னல் வேட்டை' என்ற பெயரில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள தொடங்கினர்.

82 பேர் கைது

இதில் திருச்சி மாநகரத்தில் கடந்த 48 மணி நேரத்தில் பொது அமைதிக்கு கேடு விளைவிப்பவர்கள், கொலை குற்றவாளிகள், தொடர் குற்றவாளிகள் என பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 82 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில், நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறிய 56 பேரும், கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 20 பேரும், தலைமறைவு குற்றவாளிகள் 6 பேரும் என மொத்தம் 82 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story