கள்ளழகர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.99 லட்சம்
கள்ளழகர் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.99 லட்சம் கிடைத்தது.
மதுரை
அழகர்கோவில்
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் உண்டியல்கள் அங்குள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் திறந்து நேற்று எண்ணப்பட்டன. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.98 லட்சத்து 87 ஆயிரத்து 468-ம், தங்கம் 58 கிராமும், வெள்ளி 355 கிராமும் இருந்தது. அத்துடன் வழக்கம் போல் வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தன. உண்டியல் திறப்பின் போது கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, உதவி ஆணையர் செல்வி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, ஆய்வாளர் அய்யம்பெருமாள், கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதீபா, அருள் செல்வம், மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story