100 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது


100 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது
x

100 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.

திருச்சி

லால்குடி:

வேரோடு சாய்ந்தது

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த நகர் செல்லும் சாலை அருகே திருச்சி-சிதம்பரம் சாலையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று இருந்தது. இந்நிலையில் நேற்று அந்த புளியமரம் திடீரென வேரோடு சாய்ந்து திருச்சி-சிதம்பரம் சாலையில் விழுந்தது.

அந்த நேரத்தில் அந்த வழியாக வாகனங்களிலோ, நடந்தோ யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. மேலும் சாலையில் மரம் விழுந்து கிடந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இது பற்றி தகவல் அறிந்த லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார், லால்குடி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் எந்திரம் மூலம் புளிய மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால் டோல்கேட்-சிதம்பரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story