ஆம்புலன்சில் அழகான ஆண் குழந்தை பிறந்தது


ஆம்புலன்சில் அழகான ஆண் குழந்தை பிறந்தது
x

ஆம்புலன்சில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சின்ன வெண்மணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி தனலட்சுமி(வயது 21). இவர்களுக்கு ஏற்கனவே பெண் குழந்தை ஒன்று உள்ளது. மேலும் தனலட்சுமி தற்போது 2-வது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்சில் சின்னவெண்மணி கிராமத்திற்கு விரைந்து சென்று அங்கு பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்த தனலட்சுமியை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது பிரசவ வலி அதிகமானதால் உடனடியாக அவசரகால மருத்துவ நுட்புனர் ஆனந்தராஜ் அவருக்கு முதலுதவி அளித்தார். அப்போது செல்லும் வழியிலேயே தனலட்சுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. உடனடியாக தாயையும், சேயையும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தனலட்சுமியின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் டிரைவர் பாபுவிற்கும், முதலுதவி சிகிச்சை அளித்த ஆனந்தராஜுக்கும் நன்றி தெரிவித்தனர்.


Next Story