மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது


மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
x

மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 22). கூலி தொழிலாளியான இவர், 17 வயது கல்லூரி மாணவியை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரியின்பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி போக்சோ சட்டத்தின் கீழ் ராஜேஷ் மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.


Next Story