2-வது திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
2-வது திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த கணவர் மீதும், அந்த பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கணவரின் தாய், தந்ைத உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருமணம்
புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் தர்மசம்வர்தினி்(வயது26). இவருக்கும், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வீரமங்கலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (34) என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ராஜேசுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது தர்மசம்வர்தினிக்கு தெரியவந்தது.
5 பேர் மீது வழக்கு
இதுகுறித்து தர்மசம்வர்தினி நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தனது கணவரின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரிகள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், தனது கணவர் முதல் திருமணத்தை மறைத்து தன்னை 2-வது திருமணம் செய்ததாகவும் கூறியிருந்தார். அதன்பேரில் நன்னிலம் அனைத்து மகளிர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் ராஜேஷ், அவரது தாய், தந்தை, 2 சகோதரிகள் உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.