ஆட்டை திருடி காரில் கடத்த முயன்ற தம்பதி கைது


ஆட்டை திருடி காரில் கடத்த முயன்ற தம்பதி கைது
x
மாவட்ட செய்திகள்

மணிகண்டம், ஆக.20-

மணிகண்டம் அருகே ஆட்டை திருடி காரில் கடத்த முயன்ற தம்பதி கைது செய்யப்பட்டனர்.

விவசாயி

மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40). விவசாயியான இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று மதியம் இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை அங்குள்ள காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார்.

அப்போது தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டை 2 பேர் சேர்ந்து பிடித்து ஒரு காரில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் விரைந்து வந்து கார் அருகே நின்றவரிடம் ஏன் எனது ஆட்டை பிடித்து காரில் ஏற்றுகிறீர்கள் என்று கேட்டதற்கு பதில் ஏதும் கூறாமல் காரை எடுத்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர்.

இதைபார்த்த அப்பகுதியினர் காரில் இருந்தவர்களை பிடித்து வைத்துக்கொண்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த மணிகண்டம் போலீசார் ஆட்டை திருடிதாக கூறப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் சமயபுரம் கண்ணனூர் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சரவணன் (வயது 32), அவரது மனைவி விஜய ஜெரிதா (31) என தெரியவந்தது.

சிறையில் அடைப்பு

மேலும், இவர்கள் தங்களது காரை எடுத்துக்கொண்டு சாலை ஓரமாக மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை பிடித்து காருக்குள் ஏற்றி கடத்திச் செல்வதை தொழிலாக செய்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இருவரையும் திருச்சி ஜே.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story