நல்ல பாம்புடன் போராடி இறந்த கோழி


நல்ல பாம்புடன் போராடி இறந்த கோழி
x

சீர்காழி அருகே அடைகாத்த முட்டையை குடிக்க வந்த நல்ல பாம்புடன் போராடிய கோழி உயிரிழந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள மேலசெங்கம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் கென்னட் தனசீலன் (வயது 40). வக்கீலான இவர் வீட்டின் பின்புறம் கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் தான் வளர்த்து வந்த கோழி ஒன்று இறந்து கிடப்பதை கண்டும், அங்கு 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்தபடி நின்றதை பார்த்தும் திடுக்கிட்டார். இதுகுறித்து பாம்பு பிடிக்கும் பாண்டியன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து பாண்டியன் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் பின்புறம் பதுங்கி இருந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்தார். பின்னர் அந்த பாம்பு பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டு சீர்காழி புறவழிச் சாலையில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.

பாம்புடன் போராட்டம்

இதுகுறித்து கென்னட் தவசீலன் கூறுகையில், அடைகாத்த கோழி முட்டைகளை குடிப்பதற்காக நல்ல பாம்பு வந்துள்ளது. அப்போது முட்டையை குடிக்க விடாமல் பாம்புடன் கோழி போராடியுள்ளது. அப்போது அந்த பாம்பு தீண்டியதில் கோழி இறந்துள்ளது. பின்னர் அந்த முட்டைகளை பாம்பு குடித்துள்ளது என்று கூறினார்.


Next Story