கோவில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே தகராறு


கோவில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே தகராறு
x

கோவில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு உண்டானது.

கரூர்

தரகம்பட்டி அருகே பூசாரிபட்டி கிராமத்தில் ஊர் பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட பாம்பலம்மன்-முனியப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா நடத்துவது சம்பந்தமாக இருதரப்பினர் இடையே தகராறு இருந்து வந்தது. இதையடுத்து ஒரு தரப்பினர் கடந்த 9,10, 11-ந் தேதிகளில் திருவிழா நடத்தி முடித்தனர்.இதையடுத்து மற்றொரு தரப்பினர் வருகிற 23, 24, 25-ந்தேதிகளில் திருவிழா நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக மற்றொரு தரப்பினரிடம் கோவில் சாவியை கேட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடவூர் வட்டாட்சியர் முனிராஜ் தலைமையில் நேற்று இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஒரு தரப்பினர் ஏற்கனவே திருவிழா நடத்தி முடித்து விட்டனர். மற்றொரு தரப்பினர் திருவிழா நடத்துவதற்கு யாரும் இடையூறு செய்ய கூடாது எனவும், இதனை விழா குழுவினர் கண்காணித்து கொள்ள வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதில் இருதரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. மேலும், கோவில் திருவிழா நடத்துவதில் பிரச்சினைகள் வந்தால் அரசு எடுக்கும் சட்டப்படியான முடிவுகளுக்கு இருதரப்பினரும் கட்டுப்படுவதாகவும் கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர்.


Next Story