சுகாதாரமான புதிய பாரதத்தைஉருவாக்க வேண்டும்
தூய்மையே சேவை இயக்கத்தின் மூலம் சுத்தமான, சுகாதாரமான புதிய பாரதத்தை உருவாக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.
குப்பையில்லா இந்தியா
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குப்பையில்லா இந்தியா என்ற இலக்கை அடைய நாடு முழுவதும் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர் ஒன்றியம் தண்டலை ஊராட்சியில், ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் தூய்மையே சேவை இயக்கத்தின் மூலம் பஞ்சாயத்து குளத்தில் தூய்மை பணி நடந்தது.
இந்த தூய்மை பணியினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தூய்மையை கடைபிடிக்க வேண்டும்
தூய்மையே சேவை இயக்கத்தின் மூலம் சுத்தமான, சுகாதாரமான புதிய பாரதத்தை உருவாக்க வேண்டும். வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களில் தூய்மையை கடைபிடிக்க வேண்டும். அதனடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் குப்பையில்லா இந்தியா என்ற இலக்கினை அடைய தூய்மையே சேவை இயக்கத்தில் நம்மை முழுமையாக அர்ப்பணித்து கொள்வோம் என்றார்.
இதில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சவுந்தரியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, சுப்ரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் முருகேசன், ஊராட்சி செயலாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.