லாரி டியூப்களில் அடைத்து சாராயம் விற்றவர் கைது


லாரி டியூப்களில் அடைத்து சாராயம் விற்றவர் கைது
x

லாரி டியூப்களில் அடைத்து சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

சாராயம் பறிமுதல்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் விற்கப்படுவதாக பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி தலைமையிலான போலீசார் வெங்கனூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வெங்கனூர் ஆற்றங்கரை அருகே பசும்பலூர் கிராமத்தை சேர்ந்த வேலுசாமி(வயது 33) என்பவர் சாராயம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து வேலுசாமியை பிடித்த போலீசார், அவர் விற்பனைக்காக லாரி டியூப்களில் வைத்திருந்த 300 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

கைது

பின்னர் அந்த சாராயத்தை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில் அந்தப் பகுதியிலேயே கீழே ஊற்றி அழித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேலுசாமியை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story