கத்தியை காட்டி மிரட்டி தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது


கத்தியை காட்டி மிரட்டி தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி

திருவெண்ணெய்நல்லூர்,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி குருவி விளாம்பட்டியை சேர்ந்த ராமராஜ் மகன் ரவி கிருஷ்ணா (வயது 27) என்பவர் தனியார் விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவா் தன்னுடன் பணிபுரியும் காமராஜ், சூர்யா ஆகியோருடன் மினிவேன் மூலம் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் இருசக்கர விற்பனை தொடர்பாக விளம்பரம் செய்து கொண்டிருந்தாா். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், திடீரென ரவிகிருஷ்ணாவின் மார்பில் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போனை பறிக்க முயன்றனர். அப்போது ரவிகிருஷ்ணா சக பணியாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 3 பேரையும் மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது 2 பேர் ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் பிடிபட்டார். இதையடுத்து பிடிட்ட நபர் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் கண்டம்பாக்கத்தை சேர்ந்த குணசேகர் மகன் முருகையன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், முருகையனை கைது செய்ததுடன், தப்பியோடிய 2 பேரை தேடி வருகிறார்கள்.


Next Story