வீட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம்
வில்லுக்குறி அருகே வீட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம்
திங்கள்சந்தை,
நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்தவர் வியான்ஸ் (வயது 62). இவர் வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளையில் வீடு வாங்கி தனியாக வசித்து வந்தார். இவரது மகன் சென்னையிலும், மகள் நெல்லையிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் வியான்சை சில நாட்களாக காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்தபகுதி மக்கள் நேற்று மாலையில் ஜன்னல் வழியாக வீட்டின் உள்ளே பார்த்தனர். அப்பொழுது வியான்ஸ் படுக்கையில் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பிணத்தை பார்வையிட்டனர். பிணம் அழுகிய நிலையில் இருந்தது. இதனால், அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.