ஓட்டலில் சாப்பிட சென்ற போது தப்பியோடிய கைதி


ஓட்டலில் சாப்பிட சென்ற போது தப்பியோடிய கைதி
x

ஓட்டலில் சாப்பிட சென்ற போது தப்பி ஓடிய கைதி 2 மணி நேர தேடுதலுக்கு பின் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

ஓட்டலில் சாப்பிட சென்ற போது தப்பி ஓடிய கைதி 2 மணி நேர தேடுதலுக்கு பின் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

வீடு கட்டுவதில் தகராறு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்லூரணி மேலத்தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 59). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் வீடு கட்டுவது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் தங்கப்பாண்டி (40) என்பவர் கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாக வேல்முருகன் வீட்டின் முன்னால் இருந்த தேக்கு மரத்தை வெட்டியதாகவும், அதை தட்டிக் கேட்ட வேல்முருகனின் மனைவி மகாலட்சுமியை தங்கப்பாண்டி அரிவாளால் வெட்ட வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் ம.ரெட்டியபட்டி போலீசார் வழங்குப்பதிவு செய்து தங்கப்பாண்டியை கைது செய்தனர்.

தப்பி ஓடிய கைது

இதனையடுத்து தங்கப்பாண்டியை அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ம.ரெட்டியபட்டி போலீசார் அழைத்து சென்றனர். செல்லும் வழியில் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றனர். அப்போது போலீசாரை ஏமாற்றி விட்டு தங்கப்பாண்டியன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து தங்கப்பாண்டியை அருப்புக்கோட்டை நகர் முழுவதும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

நீதிமன்றத்தில் சரண்

2 மணி நேரமாக அவர்கள் தேடி வந்தனர். இந்தநிலையில் தங்கப்பாண்டி திடீரென்று அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்த சம்பவம் அருப்புக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story