வேகமாக குறைந்து வரும் வெம்பக்கோட்டைஅணை நீர்மட்டம்


வேகமாக குறைந்து வரும் வெம்பக்கோட்டைஅணை நீர்மட்டம்
x

வெம்பக்கோட்டை அணையின் நீா்மட்டம் வேகமாக குைறந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அணையின் நீா்மட்டம் வேகமாக குைறந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

வெம்பக்கோட்டை அணை

சிவகாசி மாநகராட்சி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையில் நீர்மட்டம் 24 அடி உயரமாகும். வெம்பக்கோட்டை நீர்பிடிப்பு பகுதி மற்றும் வைப்பாற்றில் நீர்வரத்து இல்லாததாலும், கடும் வெப்பம் காரணமாகவும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் வரை 14 அடி நீர்மட்டமாக இருந்தது தொடர்ந்து மழை எதுவும் பெய்யாததால் தற்போது 10½ அடி உயரமாக நீர்மட்டம் உள்ளது.

குறைந்து வரும் நீா்மட்டம்

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

வெம்பக்கோட்டை அணை இப்பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. அத்துடன் எண்ணற்ற விவசாயிகள் இந்த அணையை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர்.

வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மக்காச்சோளம் பயிரிடும் பணியை ஏற்கனவே விவசாயிகள் தொடங்கியுள்ளனர். பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிலையில் அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மழைக்காலம் தொடங்கினால் மட்டுமே நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. இந்த பகுதியில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது பாசனத்திற்கு சேமித்து வைக்கும் வகையில் பெய்யவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story