செங்குன்றம் அருகே பஸ் மோதி ரியல் எஸ்டேட் அதிபர் பலி


செங்குன்றம் அருகே பஸ் மோதி ரியல் எஸ்டேட் அதிபர் பலி
x

செங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி ரியல் எஸ்டேட் அதிபர் பலியானார். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பஸ் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர்.

திருவள்ளூர்

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட விஜயநல்லூர் கிராமம் மசூதி தெருவைச்சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

நேற்று பகல் இவர், தனது மோட்டார் சைக்கிளில் பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கண்ணன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சாலை மறியல்

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அங்கு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கண்ணன் உயிரை பறித்த அரசு பஸ் கண்ணாடிகளை அடித்து ெநாறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அரசு பஸ் டிரைவரை ேதடி வருகின்றனர்.


Next Story