கிணற்றில் மூழ்கி சாலை பணியாளர் பலி
நங்கவள்ளி அருகே கிணற்றில் மூழ்கி சாலை பணியாளர் பலியானார்.
மேச்சேரி:"-
நங்கவள்ளி அருகே வனவாசி பனங்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர் மேட்டூரில் சாலை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் முருகன் அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடி கிணற்றுக்கு வந்தனர். அப்போது அவரது ஆடைகள் கிணற்றின் மேலே இருந்தன. அதற்குள் இருட்டானதால், அவரை தேட முடியவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று காலை தீயணைப்பு வீரர்கள், பூலாம்பட்டியை சேர்ந்த மீனவர்கள் உதவியுடன் முருகனை தேடினார்கள். தொடர்ந்து அவரது உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் முருகன் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று தெரிவித்தனர்.