பொதுவினியோக திட்டத்திற்கு தனி துறை உருவாக்க வேண்டும்


பொதுவினியோக திட்டத்திற்கு தனி துறை உருவாக்க வேண்டும்
x
தினத்தந்தி 16 April 2023 6:45 PM GMT (Updated: 16 April 2023 6:46 PM GMT)

பொதுவினியோக திட்டத்திற்கு தனி துறை உருவாக்க வேண்டும் என நாகையில் நடந்த அரசு பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகப்பட்டினம்


பொதுவினியோக திட்டத்திற்கு தனி துறை உருவாக்க வேண்டும் என நாகையில் நடந்த அரசு பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவசர ஆலோசனைக்கூட்டம்

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நாகையில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மகேந்திரன், மாநில பொருளாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசு வழங்குவது போல் அகவிலைப்படி, நிலுவைத்தொகை வழங்க வேண்டும். மருத்துவ விடுப்பு ஊதியம் பெறுவதற்கான தடையை நீக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

பொதுவினியோக திட்டத்திற்கு தனி துறை உருவாக்கிட வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19-ந்தேதி (புதன்கிழமை) சென்னையில் நடக்கும் அரசு பணியாளர்கள் சங்க ஊர்வலத்தில் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும்.

நடவடிக்கை

பட்டியலின பணியாளர்களின் பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் பணியாளர்களை தரக்குறைவாக பேசும், நாகை மண்டல கூட்டுறவு சங்க அதிகாரி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடக்கும்(திங்கட்கிழமை) குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story