தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்


தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்
x

மல்லாங்கிணற்றில் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என மல்லாங்கிணறு பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர்

காரியாபட்டி,

மல்லாங்கிணற்றில் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என மல்லாங்கிணறு பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கவுன்சிலர்கள் கூட்டம்

காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் துளசிதாஸ் தலைமை தாங்கினார்.

துணைத்தலைவர் மிக்கேலம்மாள், செயல் அலுவலர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் உதயசெல்வி, செல்லம்மாள், அழகு, அனிதா, பாலச்சந்திரன், புகழேந்திரன், ராஜேஸ்வரி, மகாலிங்கம், கருப்பையா, செல்வராஜ், சுமதி, போஸ்ஜெயசந்திரன், வைஷ்ணவி உட்பட அனைத்து பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சருக்கு நன்றி

கூட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் சீரான முறையில் குடிநீர் வழங்குவது, மேலும் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தி ஊருணிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும் என கூட்டத்தில் கூறப்பட்டது.

மேலும் அயன்ரெட்டியபட்டி பிரதான சாலை அமைக்க ரூ.75 லட்சமும், முடியனூர், கோவில்பட்டி இணைப்பு சாலை அமைக்க ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்க பரிந்துரை செய்த அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம்

மேலும் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் ஆலோசனையின்பேரில் திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்துவோம் என பேரூராட்சி தலைவர் துளசிதாஸ் கூட்டத்தில் தெரிவித்தார்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து செயல்படுத்துவோம் என்பன உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story