மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு முகாம்


மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு முகாம்
x

மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு முகாம் இன்று முதல் நடக்கிறது.

திருச்சி

மகளிர் உரிமை திட்டம்

திருச்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் கடந்த ஜூலை 24-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை முதற்கட்டமாகவும், 5-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 2-ம் கட்டமாகவும் நடந்தது.

இந்தநிலையில் முதல்-அமைச்சரின் அறிவிப்பின்படி, ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அந்த குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் ஆகிய திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்கள் மற்றும் ஏற்கனவே நடைபெற்ற முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வர இயலாத பெண்கள் ஆகியோர் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் விண்ணப்பிக்க சிறப்பு விண்ணப்பப்பதிவு முகாம்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.

விண்ணப்பதாரர்கள்

முதல் கட்ட மற்றும் 2-ம் கட்ட விண்ணப்பப்பதிவு நடைபெற்ற இடங்களில் காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரை முகாம் நடைபெறும். இந்த முகாமில் மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. இதுவரை விண்ணப்பங்கள் ஏதும் பெறாத விண்ணப்பதாரர்கள் முகாமில் பொறுப்பு அலுவலரிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து முகாமில் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் முகாமிற்கு வரும்போது, ஆதார்கார்டு, ரேஷன்கார்டு, மின்கட்டண ரசீது, வங்கி புத்தகம் ஆகியவற்றின் அசல் ஆவணங்களை எடுத்து வர வேண்டும். மேலும் சந்தேகங்களுக்கு திருச்சி கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 9384056213 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.


Next Story