தோட்டத்தில் திடீர் தீ விபத்து
உடன்குடி அருகே தோட்டத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் மெயின் ரோட்டில் தருவைகுளம் உள்ளது. இதற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் ஏராளமான தென்னை, பனை மரங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், மின்வாரியத்தினர், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து இரவு சுமார் 11.30 மணிக்கு தீயை அணைத்தனர். மின்சார கம்பிகள் உரசலால் இந்த தீ விபத்து நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தீ விபத்தில் பனை, தென்னை மரங்கள் எரிந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இச்சம்பவம் உடன்குடி மற்றும் சுற்று வட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story