கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரக்கோரி கண்ணீர் மல்க பெண் மனு
கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரக்கோரி கண்ணீர் மல்க பெண் மனு அளித்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அரசலூர் கிராமத்தை சேர்ந்த முருகேசனின் மனைவி ராஜலட்சுமி. இவர் நேற்று காலை தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் கற்பகத்தை சந்தித்து கண்ணீர் மல்க ஒரு மனு கொடுத்தார். அதில், எனது கணவர் முருகேசன் (வயது 47) குடும்ப சூழ்நிலை காரணமாக சவுதி அரேபியா நாட்டில் ரியாத்தில் ஒரு நிறுவனம் மூலம் வெல்டிங் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அங்கு அவர் உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாக கடந்த 7-ந்தேதி காலை எங்களுக்கு தகவல் கிடைத்தது. எனவே அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் கற்பகம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் தெரிவித்தார்.
Related Tags :
Next Story