முன்விரோத தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து


முன்விரோத தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து
x

முன்விரோத தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.

திருச்சி

காட்டுப்புத்தூர்:

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே உள்ள சீனிவாசநல்லூர் ஊராட்சியை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 24). இவரது உறவினா் வீடு ஏலூர்பட்டியில் உள்ளது. அங்கு சுப்பிரமணிக்கு, சந்தோஷ், ஆனந்த், ஹரிஹரன், விக்கி ஆகிய நண்பர்கள் உள்ளனர். இந்த நிலையில் சந்தோசுக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சுப்பிரமணி, விக்கி ஏலூர்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, வேந்தன்பட்டியைச் சேர்ந்த ஜெகன்(23), கல்லூர்பட்டியைச் சேர்ந்த திருமேனி(22), மோகன்தாஸ்(24) ஆகிய 3 பேரும் ஒன்றுசேர்ந்து அவர்களை தாக்கினர். இதில் சுப்பிரமணிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story