வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது
வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை
ஆதனக்கோட்டை அருகே குப்பையன்பட்டி கிராமத்ைத சேர்ந்தவர் சின்னையா (வயது 70). இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் நேற்று ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் உள்ளே இருந்து மர்ம நபர் ஒருவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து சின்னையா ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சின்னையா வீட்டில் திருட முயன்றது ஆதனக்கோட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்த ரெங்கசாமி மகன் அரசு (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அரசுவை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story