கணவன்-மனைவி சண்டையை தடுக்க முயன்ற வாலிபருக்கு கத்திக்குத்து


கணவன்-மனைவி சண்டையை தடுக்க முயன்ற வாலிபருக்கு கத்திக்குத்து
x

கணவன்-மனைவி சண்டையை தடுக்க முயன்ற வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.

திருச்சி

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சாதிக் அலி (வயது 32). இவர் நேற்று மாலை வீட்டில் இருந்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த முகமது அலி மற்றும் அவரது மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் சாதிக் அலியின் வீட்டு முன்பு வந்து சண்டை போட்டு அடித்ததை தடுக்க முயன்றார். அப்போது முகமது அலி, சாதிக் அலியை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த கத்தியால் குத்தினர். இதில் காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் முகமது அலியை (30) கைது செய்தனர்.


Next Story