ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோவில் திருவிழா


ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோவில் திருவிழா
x

நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பொன்னர் சங்கர் கோவில் திருவிழா நடைபெற்றது.

திண்டுக்கல்

நத்தம் அருகே பாதசிறுகுடியில், பிரசித்திபெற்ற பொன்னர் சங்கர் கோவில் உள்ளது. இங்கு மகாமுனி, நல்லதங்கா, குட்டி கருப்பன் ஆகிய சன்னதிகளும் உள்ளன. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில், இந்த கோவிலில் கிடாய் வெட்டி படையல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிமாத திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மேளதாளம் முழங்க சாமி அழைத்து வரப்பட்டு, கிடாய்களுடன் சாமியாட்டம் ஆடி பொன்னர் சங்கர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இதைத்தொடர்ந்து பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர் மஞ்சள் தண்ணீர் தெளித்து, ஒன்றன்பின் ஒன்றாக 20 கிடாய்கள் பலியிடப்பட்டன. அதன்பிறகு சிறு, சிறு துண்டுகளாக இறைச்சியை வெட்டி பாத்திரத்தில் வைத்து சமைக்கப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு சாமிகளுக்கு படையல் நடந்தது. படையல் நடக்கும் அந்த நேரத்தில் ஆண்கள் சத்தமோ, வெளிச்சமுள்ள எந்த பொருட்களையுேமா உபயோகிக்கவில்லை. குறிப்பாக பெண்கள் அந்தப் பக்கமே வரவில்லை. பின்னர் சாதத்தை உருண்டைகளாக பிடித்து பொன்னர் சங்கரின் பீடத்தின் முன்பு வைக்கப்பட்டது. தீபாராதனைகள், பூஜை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சாமி அருள்பாலித்தார். அதன்பிறகு அன்னதானம் நடந்தது.


Next Story