சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பஸ்


சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பஸ்
x
தினத்தந்தி 20 Feb 2023 12:30 AM IST (Updated: 20 Feb 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே சாலையோர பள்ளத்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து கேரளாவை சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 40-க்கும் மேற்பட்டோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். அங்கு சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்து விட்டு அவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் பழனி நோக்கி சுற்றுலா பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். கொடைக்கானல்-பழனி மலைப்பாதையை கடந்து வரதமாநதி அணை பகுதியில் உள்ள வளைவில் பஸ் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் வந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். பின்னர் காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பழனி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story