சாராயம் விற்ற வாலிபர் கைது


சாராயம் விற்ற வாலிபர் கைது
x

சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

கீழக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சின்னசேலம் அருகே பாக்கம்பாடி கிராம பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஏரி அருகே மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் காளசமுத்திரம் தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (வயது 29) என்பதும், லாரி டியூப்களில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 105 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story