ஜூன் 20ம் தேதி அமமுக செயற்குழு கூட்டம் - டிடிவி தினகரன் அறிவிப்பு
ஜூன் 7 ஆம் தேதி நடைபெறவிருந்த அமமுக செயற்குழு கூட்டம் ஜூன் 20 ஆம் தேதி நடைபெறும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
சென்னை,
ஜூன் 7 ஆம் தேதி நடைபெறவிருந்த அமமுக செயற்குழு கூட்டம் ஜூன் 20 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜூன் 7ஆம் தேதி நடைபெறவிருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம், வருகின்ற ஜூன் 20ஆம் தேதி, செவ்வாய்க் கிழமை, காலை 09.00 மணி அளவில், சென்னை, ராயப்பேட்டையிலுள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறும்.
அனைத்து கழக செயற்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story