Normal
பாரம்பரியமிக்க ஓவியங்களை பாதுகாக்கும் பணிக்கு விண்ணப்பங்கள் ஏற்பு - அறநிலையத்துறை அறிவிப்பு
பாரம்பரியமிக்க ஓவியங்களை புனரமைத்து பாதுகாக்கும் பணிகளை மேற்கொள்ள தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கோவில்களில் உள்ள நூற்றாண்டு பழமைமிக்க பாரம்பரிய ஓவியங்களை பாதுகாக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி அறநிலையத்துறை சார்பில் தகுதி வாய்ந்த வல்லுனர்கள், கோவில்களில் உள்ள சுவர் ஓவியங்களை புனரமைத்து பராமரிப்பவர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஓவியங்களை புனரமைத்து பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ள தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், ஜூன்30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story