விபத்தில் பெண் பலி


விபத்தில் பெண் பலி
x

விபத்தில் பெண் பலியானார்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி வேடன் நகரை சேர்ந்தவர் முரளி (வயது 40). அவரது மனைவி செல்வராணி (35). இவர்கள் மொபட்டில் கீரனூர் சென்றுவிட்டு மீண்டும் வேடன் நகர் திரும்பி கொண்டிருந்தனர். நேமத்தான்பட்டி போலீஸ் சோதனைச்சாவடி அருகே சென்றபோது எதிரே வந்த கார் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த சாலையின் மையப்பகுதிக்கு வந்தது. அந்த கார் மீது மோதாமல் இருக்க முரளி மொபட்டை சாலையோரம் திருப்பியோது பின்னால் வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த செல்வராணி பரிதாபமாக இறந்தார். முரளி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து செட்டிநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story