திறனாய்வு தேர்வில் மாணவர்கள் சாதனை


தேசிய திறனாய்வு தேர்வில் தச்சன்விளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் யூனியன் தச்சன்விளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு எழுதிய மாணவர்கள் கோகுல் ெஜயசூர்யா, வெங்கடேஷ் ஆனந்த், மாணவி தனலட்சுமி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

சாதனை படைத்த மாணவர்களை அரசூர் பஞ்சாயத்து தலைவர் தினேஷ் ராஜசிங், வட்டார கல்வி அலுவலர் ரோஸ்லின் ராஜம்மாள், தலைமை ஆசிரியை ரெக்ஸ்லின் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story