பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை


பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை
x

மாவட்டம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்


மாவட்டம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

திடீரென ரத்து

விருதுநகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் விருதுநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் ஊழியர் பற்றாக்குறை காரணமாக பஸ்கள் இயக்கப்படுவதில் பிரச்சினை தொடர்கிறது. அதிகாலை நேர பஸ்கள் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படுவதில்லை.

திடீரென ரத்து செய்யப்படும் நிலையும் உள்ளது. கிராமப்புறங்களுக்கான பஸ்கள் இயக்கப்படுவது தாமதிக்கப்படும் நிலையும், நடை எண்ணிக்கை குறைக்கப்படும் நிலையும் தொடர்கிறது. மதிய நேரங்களில் ஊழியர் பற்றாக்குறை காரணமாக பஸ்கள் பஸ் நிலையத்திலேயே நீண்ட நேரம் முடங்கிவிடும் நிலை ஏற்படுகிறது.

பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. ஆதலால் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு பள்ளி குழந்தைகள் வர வேண்டிய நிலையில் போதிய அளவு பஸ்கள் இயக்கப்படவில்லையென்றால் பள்ளி நேரங்களில் குழந்தைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு வர முடியாத நிலை ஏற்படும். அத்துடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணிக்கும் நிலை ஏற்பட்டால் விபத்துகள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.

நடவடிக்கை

எனவே பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டியது அவசியமாகிறது.

ஆதலால் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து போக்குவரத்து கழக நிர்வாகத்துடன் கலந்தாய்வு செய்து பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது இல்லையேல் பள்ளிக்குழந்தைகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டு விடும்.


Next Story