இயக்குநர் ஷங்கருக்கு விலை உயர்ந்த வாட்ச்-ஐ அன்பளிப்பாக வழங்கிய நடிகர் கமல்ஹாசன்


இயக்குநர் ஷங்கருக்கு விலை உயர்ந்த வாட்ச்-ஐ அன்பளிப்பாக வழங்கிய நடிகர் கமல்ஹாசன்
x

இயக்குநர் ஷங்கருக்கு விலை உயர்ந்த வாட்ச்-ஐ அன்பளிப்பாக வழங்கி நடிகர் கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார்.

சென்னை,

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளதாக நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா காட்சிகள் நிறைவு செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குநர் ஷங்கருக்கு விலை உயர்ந்த வாட்ச்-ஐ அன்பளிப்பாக வழங்கி நடிகர் கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார்.

இது குறித்து காமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

'இந்தியன் 2' படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் இயக்குனர் ஷங்கர்.இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி. என தெரிவித்துள்ளார்.


Next Story