உடுமலை-திருப்பூர் வழித்தடத்தில் போதுமான பஸ்கள் இயக்கப்படாத நிலையில் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை-திருப்பூர் வழித்தடத்தில் போதுமான பஸ்கள் இயக்கப்படாத நிலையில் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
போடிப்பட்டி,
உடுமலை-திருப்பூர் வழித்தடத்தில் போதுமான பஸ்கள் இயக்கப்படாத நிலையில் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் அவதி
மாவட்ட தலைநகரான திருப்பூர் பின்னலாடை நகரமாக விளங்கி வருகிறது. மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை தலைமை அலுவலகங்களும் இங்கு செயல்பட்டு வருகிறது.இதனால் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளிலிருந்து தினசரி ஏராளமானவர்கள் திருப்பூருக்கு சென்று வருகின்றனர். ஆனால் உடுமலையிலிருந்து திருப்பூருக்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
திருப்பூரைப் பொறுத்தவரை ஏராளமான தொழில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது.இதனால் உடுமலை, மடத்துக்குளம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், திருப்பூர் வழித்தடத்தில் உள்ள கிராமங்கள் என 100-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் திருப்பூர் நோக்கி தினசரி பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் கலெக்டர் அலுவலகம் இங்கு உள்ளதால் தினசரி அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலரும் திருப்பூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதனால் காலை நேரத்தில் உடுமலை பஸ் நிலையத்திலிருந்து திருப்பூர் செல்வதற்கு ஏராளமானோர் காத்து நிற்பார்கள்.ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் இயக்கப்படும் போது, குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்றாக வேண்டிய கட்டாயத்தால் முண்டியடித்து பஸ்ஸில் ஏற வேண்டிய நிலை ஏற்படுகிறது.
கூடுதல் பஸ்கள்
முதியவர்கள் மற்றும் பெண்களுக்குக் கூட இடம் கிடைக்காததால் நின்று கொண்டே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அத்துடன் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி, குடிமங்கலம், பெரியபட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களும் இந்த பஸ்களையே நம்பியிருப்பதால் படிக்கட்டு வரை தொங்கிக் கொண்டு பயணம் மேற்கொள்கின்றனர். அதையும் தாண்டி வழி நெடுகிலும் மக்கள் ஏறிக்கொண்டே இருப்பதால் மூச்சு விடக்கூட சிரமப்படும் நிலையில் அவஸ்தை பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.குறிப்பாக பல்லடம் பகுதியில் ஏறும் பயணிகள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வது என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. எனவே நெரிசலைத் தவிர்க்க பல்லடம் பகுதியிலிருந்து திருப்பூருக்கு அதிக பஸ்களை இயக்க வேண்டும்.
மேலும் அதிக மக்கள் பயணம் செய்யும் நேரத்தைக் கணக்கிட்டு அந்த நேரங்களில் உடுமலை-திருப்பூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வழியோர கிராமப்புற மக்கள் பயன் பெறும் வகையில் கூடுதல் எண்ணிக்கையில் டவுன் பஸ்களையும் இயக்க வேண்டும்'என்று பொதுமக்கள் கூறினர்.